மாநில அளவிலான கராத்தே போட்டி – 2025:
இன்று 7/12/25 சென்னையில் நடை பெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் சித்துக்காடு அரசு பள்ளி சார்பாக கலந்துகொண்ட நம் மண்ணின் வீர மைந்தர்கள்
செந்தூர பாண்டியன் /சுரேஷ் பாபு முதல் இடத்தையும், சபரி /பால செந்தில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள்.
அவரது பெற்றோர்களுக்கும், ஆசனுக்கும்,சித்துக்காடு அரசு பள்ளிக்கும் மற்றும் நமது ஊருக்கும் பெருமை தேடி தந்துள்ளார்கள்.
வாழ்த்துகள் மென்மேலும் சாதனை சிகரம் தொடுவதற்கு.
மாநில அளவிலான கராத்தே போட்டி – 2025:
இன்று 6/12/25, சென்னையில் நடை பெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் நமது சித்துக்காடு சேர்ந்த அரசு ஓவியா (7-அம் வகுப்பு) சித்துக்காடு அரசு உயர் நிலை பள்ளி சார்பாக கலந்துகொண்டு மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்.
என்ற குறலுக்கு இணங்க அவரது கடின உழைப்பினால் அவரது பெற்றோர்க்கும் நமது பள்ளிக்கும் மற்றும் நமது ஊருக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.
மாணவியின் திறன் அறிந்து பயிற்று வித்த பெற்றோர்க்கும். ஆசானுக்கும் வாழ்த்துக்கள்.
தொடரட்டும் வெற்றி நடை !!









