சித்துக்காடு வளர்ச்சி சமநீதி அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு வண்ண சீருடை நன்கொடை
10-Dec-2025: சித்துக்காடு வளர்ச்சி சமநீதி அறக்கட்டளை சார்பாக, குளமங்கலம் தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் அணிவதற்கான வண்ண சீருடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு வண்ண சீருடை தேவையுள்ளதாக சகோதரர் திரு. வடிவேல் அவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, ரூ. 30,000/- மதிப்பில் வண்ண சீருடைகள் வழங்கும் பணியை அறக்கட்டளை மேற்கொண்டது. இந்த வண்ண சீருடைகளை திருப்பூரில் சிறப்பாக வடிவமைத்து வழங்கிய சகோதரர் திரு. ப. சந்திரமோகன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முயற்சி மாணவர்களின் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டை முன்னிறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் சித்துக்காடு அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை – தினசரி நாளிதழில் வெளியான செய்தி.

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி – 2025:
இன்று 7/12/25 சென்னையில் நடை பெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் சித்துக்காடு அரசு பள்ளி சார்பாக கலந்துகொண்ட நம் மண்ணின் வீர மைந்தர்கள்
செந்தூர பாண்டியன் /சுரேஷ் பாபு முதல் இடத்தையும், சபரி /பால செந்தில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள்.
அவரது பெற்றோர்களுக்கும், ஆசனுக்கும்,சித்துக்காடு அரசு பள்ளிக்கும் மற்றும் நமது ஊருக்கும் பெருமை தேடி தந்துள்ளார்கள்.
வாழ்த்துகள் மென்மேலும் சாதனை சிகரம் தொடுவதற்கு.
மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி – 2025:
இன்று 6/12/25, சென்னையில் நடை பெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் நமது சித்துக்காடு சேர்ந்த அரசு ஓவியா (7-அம் வகுப்பு) சித்துக்காடு அரசு உயர் நிலை பள்ளி சார்பாக கலந்துகொண்டு மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்.
என்ற குறலுக்கு இணங்க அவரது கடின உழைப்பினால் அவரது பெற்றோர்க்கும் நமது பள்ளிக்கும் மற்றும் நமது ஊருக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.
மாணவியின் திறன் அறிந்து பயிற்று வித்த பெற்றோர்க்கும். ஆசானுக்கும் வாழ்த்துக்கள்.
தொடரட்டும் வெற்றி நடை !!









